பெற்றோரை இழந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசின் 75000 உதவித்தொகை பெறுவது எப்படி முழு விவரம் - KALVIITHAL

Search This Web

Join Our Group

Friday 8 September 2023

பெற்றோரை இழந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசின் 75000 உதவித்தொகை பெறுவது எப்படி முழு விவரம்

பெற்றோரை இழந்த அரசு பள்ளி மாணவர்களுக்கும், விபத்தில் மாணவரை இழந்த குடும்பத்திற்கும் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை வழியாக வழங்கும் நிதி உதவித்தொகை பெறுவது எப்படி முழு விவரம்.


தமிழ்நாட்டில் உள்ளஅரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் உதவிக்கரம்..

.நலத்திட்டங்கள்...3 

இதோ.

தமிழக அரசு,அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு படிப்பு மட்டும் சலுகையாக இலவசமாக  தமிழகஅரசு வழங்கவில்லை..அவர்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்திலும் அரசு திட்டங்கள் மூலம் பங்கெடுத்துவருகிறது.. பல ஆண்டுகளாக தமிழக அரசு கல்வித்துறை வழியாக செய்து வரும் நலத்திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்...வாருங்கள்.

.இந்த நலத்திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்ள நாம் விசாரித்ததில் ,புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி ஆங்கில பட்டதாரி ஆசிரியர் திரு நாகராஜன் அவர்கள் விழிப்புணர்வு செய்வது,இலவசமாக இதற்கு விண்ணப்பங்களை தயார் செய்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் விண்ணப்பிக்க உதவி செய்து வருவது தெரிந்து அவரிடம்  விளக்கம் கேட்டபோது அவர் பல அரசு விபத்துக்காப்பீடு திட்டங்கள் குறித்து தகுந்த அரசாணைகளுடனும், தேவையான ஆவணங்களுடனும் விளக்கிக்கொண்டே சென்றது....ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது....அவரது விளக்கம் உங்களுக்கு அவசியம் தெரிந்துகொள்ள நமது வலைதளத்தின் சிறப்பு கட்டுரையாக இங்கு தொகுத்து வழங்குகிறோம்.

                அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி குழந்தைகளுக்கு அவர்களின் எதிர்கால தேவைக்கு ,குடும்ப சூழலால் பெற்றோரை இழந்த அரசு அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் அந்த குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ரூபாய்75000 வைப்புத்தொகையாக அரசு வைத்திருந்து அந்த குழந்தைகளுக்கு 21 வயது வரும்போது  முழுத்தொகையுடன் வட்டியும் சேர்த்து வழங்குகிறது....

அரசு பள்ளிகளில் பயிலும்மாணவர்கள் எதிர்பாராத விதமாக விபத்தால் இறந்துவிட்டால் அந்த மாணவரின் குடும்பத்திற்கு 1 லட்சம் நிவாரணத்தொகையும் தமிழக அரசு தருகிறது.

                இது மட்டுமா சிங்கிள் பெற்றோர் /பெற்றோர் இருவரையும் இழந்த  வசதி இல்லாமல் சிரமப்படும் குடும்பத்தில்உள்ள ஒரு அரசுபள்ளி மாணவிக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தைக்கு மட்டும்  3 வருடத்திற்கு ரூபாய் 4000 மாதா மாதம்   (குழந்தைகள் கல்வி கற்காமல் இடைநிற்றலை தவிர்க்க மாநில அரசு40 சதவீதம் மத்திய அரசு 60 சதவீதம் உதவித்தொகை பங்கு செய்கிறது.தற்போது வரை வருடத்திற்கு ஒரு மாவட்டத்திற்கு  41 குழந்தைகளுக்கு மட்டும்) உதவித்தொகை வழங்குகிறது.. இந்த திட்டம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் வழியாக வழங்கப்படுகிறது.

திட்டம் 1.  75000 உயர் கல்வி பயில நிதி உதவித்தொகை அரசாணை 39/2005,127/2005,195/2014ன் படி

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 1முதல் 12ம் வகுப்பு வரை  கல்வி பயின்று கொண்டிருக்கும் குழந்தைகளில் யாருடைய குடும்பத்திலாவது அவர்தம் பெற்றோரரில் ஒருவரோ அல்லது இருவருமோ சாலை விபத்தில், விபத்துகளால்  மரணமடைந்திருந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்திருந்தாலோ,அல்லது எதிபாராவிதமாக  பாம்பு கடித்து இறந்திருந்தாலோ,மின்சாரம் தாக்கி,இடி மின்னல் தாக்கி இறந்திருந்தால் அல்லது எதிர்பாராவிதமாக மரணம் குறிப்பாக கிணற்றில் விழுந்து இறப்பு மரத்தில் இருந்து விழுந்து,இதுபோன்ற  எதிர்பாராத இயற்கை சீற்றங்களால் ,விபத்தினால்   மரணம் சம்பவித்திருந்தால் அல்லது விபத்தால் நிரந்தர முடக்கம் அடைந்திருந்தால் அவர்தம் குடும்பத்தில் அரசுமற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் அந்த குடும்பத்தை சார்ந்த அரசு பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும்  தமிழக அரசு சார்பில் அரசாணைகள் 39/2005,127/2005 மற்றும் 195/ 27.11.2014 ன்படி   மாணவர் கல்வி நிதி உதவித்தொகை ருபாய்75000   தமிழக அரசு கல்வித்துறை மூலம் விண்ணப்பித்து பெறலாம்.

பெற்றோர் விபத்தில் பாதிக்கப்பட்டு இறந்தாலோ நிரந்தர முடக்கம் அடைந்தால் 75000 குழந்தைகளுக்கு வழங்கும் அரசாணை 127/2005 லிங்க்:Click here

II இரண்டாவது திட்டம் அரசாணை 17/2018

தமிழக அரசு,அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் எதிர்பாராத விதமாக சாலை விபத்தில்,அல்லது எதிர்பாராத விபத்துகளால் மரணமடைந்து விட்டால் ரூபாய் 1 லட்சம் நிவாரணத்தொகை  மற்றும் லேசான காயம் முதல் பலத்த காயமடைந்தால் அவர்களுக்கு 25000 முதல் 50000 வரை நிதியுதவி அந்த மாணவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு அரசாணை 17/07-02-2018ன் படி வழங்கி வருகிறது. இந்த திட்டம் 2018 பிப்ரவரி முதல் அமலில் உள்ளது.

விபத்தில் மாணவர் இறந்தால் 1 லட்சம் வழங்கும் அரசாணை 17/2018 லிங்க்:Click here

50000 லிருந்து 75000 ஆக விபத்துக்காப்பீடு உயர்த்தி 195/2014ல் தமிழக அரசின் அரசாணை லிங்க்:

முக்கிய குறிப்பு. மேற்கண்ட திட்டம் 1, 2 விண்ணப்பிக்கும்போது கவனத்தில் கொள்ளவும்:
  திட்டம் 1,2 க்கு கல்வித்துறை மூலம் மட்டுமே விண்ணப்பித்து பெற முடியும். 

விபத்தில் பெற்றோர்கள் இறந்த நாளன்றும் விண்ணப்பிக்கும்போதும்,அந்த குடும்பத்தில் உள்ள  மாணவர் அரசு ,அரசு உதவிபெறும் பள்ளியில் மாணவராக இருக்க வேண்டும்.

இந்த திட்டம் தமிழக அரசு, அரசு உதவிபெறும் பள்ளியில்1முதல் 12ம் வகுப்பு வரை பயின்றுகொண்டிருக்கும் மாணவர்களுக்கு மட்டும் பொருந்தும்.தனியார் பள்ளிகள்,matric பள்ளிகள் fully aided பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பொருந்தாது.

75000 மாதிரி விண்ணப்பம்:Click here

திட்டம் III  பெற்றோரை இழந்த குழந்தைகளின் குடும்பத்தில் ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தைக்கு மாதாமாதம் 4000 உதவித்தொகை 3 வருடத்திற்கு வழங்கப்பட்டுவருகிறது.

பெற்றோரை இழந்து வறுமையில் வாடும் அரசு பள்ளியில் பயிலும் குடும்பத்தில் உள்ள ஒரு மாணவிக்கு மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் வழியாக 3 வருடத்திற்கு மாதா மாதம் ரூபாய்4000 உதவித்தொகை( mission vaatsaalya என்ற மத்திய மாநில அரசு நலத்திட்டம்) ஒரு குடும்பத்திற்கு  ஒரு குழந்தைக்கு மட்டும்  இடைநில்லாமல் கல்வி பயில மத்திய அரசு  தமிழக அரசுடன் இணைந்து உதவித்தொகை வழங்கி வருகிறது. 

அரசு 75000 க்கான வைப்புத்தொகை பத்திரம் லிங்க்:Click here

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு மாதம் 4000 உதவித்தொகை 3 வருடத்திற்கு .....

சிங்கிள் பேரண்ட்,அல்லது இருவரையும் இழந்த தமிழக அரசு அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு  அரசின் கல்வி உதவித் தொகையாக *மாதம் 4,000 ரூபாய்* மத்திய மற்றும்மாநில அரசுகள் பங்களிப்பில்   3 வருடங்களுக்கு.... ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தைக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. 

இதற்காக பிரத்யேகமான விண்ணப்ப படிவம் எதுவுமில்லை...

மாவட்ட ஆடசியரிடம் கருணை மனு திங்கள்கிழமை அன்று கொடுத்தால் போதுமானது. அல்லது நேரிடையாக மாவட்ட குழந்தைகள் அலுவலகத்தில் மனு மேற்கண்ட ஆவணங்களுடன் கொடுக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பமாக ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரம் திங்கள்கிழமை அன்று நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாளில் GDP. ....பாதிக்கப்பட்ட பெற்றோர் சார்பில் ஆட்சியரிடம் தேவையான ஆவணங்களை இணைத்து. மனு ஸ்டாம்ப் 5 ரூபாய்க்கானது ஒட்டி,  கருணை மனு அந்தந்த மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் நாளில் கொடுக்கலாம். மனு மீது கள விசாரணை செய்து முன்னுரிமைப்படி  இந்தத் தொகையானது 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில்படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.  கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு இது பொருந்தாது.

4000 பெற தேவையான இணைக்கப்படவேண்டிய ஆவணங்கள் :


1.தந்தை (or) தாய் இறப்புச் சான்றிதழ் 
2.ஆதார் அட்டை 
3.ரேஷன் கார்டு 

4.கண்டிப்பாக கிராமத்தில் வசிப்பவர்களுக்கு வருமானவரிச் சான்று குறிப்பாக 40000 முதல் 70000  க்குள் இருக்குமாறு பெறப்பட வேண்டும். நகரங்களில் வசிப்பவர்களுக்கு 72000 முதல் 96000க்குள் இருக்க வேண்டும்.(சான்று ஒரு வருடத்திற்குள் பெறப்பட்டதாக இருக்க வேண்டும்.)

5.ஜாதி சான்றிதழ் 
6.வாக்காளர் அட்டை 
7.வாரிசு சான்று
8. விதவை சான்று.
9. குடும்பத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் ஆதார் கார்டு 

10..பள்ளியில் படித்துக் கொண்டிருப்பதற்கான சான்று(bonafide certificate)


இந்த சான்றுகள் மட்டும் போதுமானது..நேரடியாக மனுவை குழந்தைகள் நல அலுவலகத்தில் அல்லது திங்கள் அன்று ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி யில் கொடுத்துவிடலாம்.

ஆசிரியர் நாகராஜன் ஐயா அவர்கள் முடிக்கும்போது ஒரு கூடுதல் தகவலையும் சொல்லினார்.. விபத்தில் உயிரிழந்த,  அல்லது படுகாயமடைந்த பொதுமக்களுக்கு தமிழக முதலமைச்சர் சாலை விபத்து நிவாரண உதவி 1 லட்சமும்,காயமடைந்தால் நிவாரணத்தொகையும்  கூடுதலாக பெற காவல்துறை மூலம்( victim fund) விண்ணப்பித்து பெற முடியும்.இலவசமாக என்றும்

விபத்தில் இறந்தவர் இறக்கும் நாளுக்கு முன்னர் 45 நாட்களில் அவரின் ATM அட்டை பயன்படுத்தி பணம் எடுத்திருந்தால் அவருக்கு வங்கி மூலம் 1லட்சம் முதல் 1.5லட்சம் வரை பெறலாம்..இதற்கு விபத்தில் இறந்தவர் குடும்பத்தினர் இறந்த 60 நாளில் வங்கிக்கு எழுத்து மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற தகவலை நமக்கு போனஸாக கூறியதும் அசந்து போனோம்.

பல அருமையான தகவலை அள்ளி கொடுத்த ஆசிரியரிடம்  உங்கள் பணி தொடர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டோம்..... ஆசிரியர் அவர்களை பாதிக்கப்பட்டவர்கள் இலவசமாக  விண்ணப்பித்து கொள்ள மற்றும் உதவிக்கு...தொடர்பு கொள்ள அழையுங்கள்.

L. நாகராஜன் 
பட்டதாரி ஆசிரியர் PUMS KULAVAIPATTI
விராலிமலை ஒன்றியம்,புதுக்கோட்டை மாவட்டம்.
9865149705.

இப்படி அரசு திட்டத்தை அனைவருக்கும் பயன்படுத்தும் வகையில் அரசு பள்ளி ஆசிரியர் இலவச சேவையாக செய்து இதுவரை 50க்கும் மேற்பட்ட மண்வருக்கு 75000 உதவித்தொகை பெற்று வழங்கியுள்ளார் ,10க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மாணவர்கள் இறந்ததற்காக 1 லட்ச நிவாரணத்தொகையும்,தமிழகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 4000 உதவித்தொகை பெற உதவி செய்துள்ளார் .

இப்போது இராமநாதபுரம் ,புதுக்கோட்டை மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலர்கள் அனுமதி பெற்று உயர் மேல் நிலை பள்ளிகளின்  தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் அரசின் விபத்துக்காப்பீடு குறித்து விழிப்புணர்வும் கூடுதலாக செய்துள்ளார். விரைவில் பல மாவட்ட  தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய முயற்சிக்கிறார் என்ற பிரம்மாண்டமான இவரின் சாதனைகளை பார்த்து  பிரமித்து போய்    நாமும் நமது வாசகர்கள் சார்பில் வாழ்த்து தெரிவித்து விடைபெற்றோம்.

அர்த்தமுள்ள அர்ப்பணிப்பு உணர்வு ஆசிரியர் ,எதிர்பாராத இலவச சேவை இவரின் சேவை தொடரட்டும் ,போற்றுதலுக்குரியது. இந்த பயனுள்ள தகவல் பெற்றோரை இழந்து தவிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கண்டிப்பாக பயன்பட வேண்டும். ஆகவே ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவர்கள் உங்களது அருகில் காணப்படும் பெற்றோரை இழந்து தவிக்கும் மாணவர்களுக்கு கண்டிப்பாக இந்த தகவலை பகிருங்கள். இத்தொகை அவர்கள் வாழ்வில் மிகவும் பயனுள்ளதாக காணப்படும்.

வட்டார அளவில் ஆசிரியர்கள் கூட்டத்தில் விபத்துக்காப்பீடு குறித்து  ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் முன் விழிப்புணர்வு செய்த போது சில புகைப்படம்.75000 உதவிதொகை விண்ணப்பம், 1 லட்ச ரூபாய் நிவாரணத்தொகை விண்ணப்பம் இலவசமாக தயார் செய்து பெற்றோர்கள் முன்னிலையில் தலைமை ஆசிரியர்களிடம் வழங்கிய நிகழ்வுகள்.புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் உயர் மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கூட்டத்தில் விபத்துக்காப்பீடு குறித்து விழிப்புணர்வு.

இராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் முன் தலைமை ஆசிரியர் கூட்டத்தில் விழிப்புணர்வு.
இந்த பயனுள்ள உதவியை பெற்றோரை இழந்து தவிக்கும் மாணவர்களுக்கு உதவி செய்யும் ஐயா நாகராஜன் சார் அவர்களுக்கு மிகவும் நன்றி... உங்கள் பணி சிறக்கட்டும்

நன்றியுடன் 
உங்கள் ஆசிரியர்
கல்வி இதழ் மற்றும் தமிழ் மலர் இணையதளம்... .


No comments:

Post a Comment

Popular Posts