News Update:ஆராய்ச்சி ஊக்கத்தொகை தேர்வு: TRB இணையத்தில் விண்ணப்பிக்கலாம் - KALVIITHAL

Search This Web

Join Our Group

Wednesday 1 November 2023

News Update:ஆராய்ச்சி ஊக்கத்தொகை தேர்வு: TRB இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

News Update:ஆராய்ச்சி ஊக்கத்தொகை தேர்வு: TRB இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

STUDY MATERIALS CLICK BELOW LINK👇👇👇

முதல்வரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை தேர்வுக்கு, வரும், 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து, அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:


தமிழக கல்லுாரி மாணவர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்த, முதல்வரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, கலை, மனிதநேயம், சமூக அறிவியல் பிரிவில், 60; அறிவியல் பிரிவில், 60 மாணவர்களுக்கு, ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.


மாதம், 25,000 ரூபாய் வீதம், 2 ஆண்டுகளுக்கும்; அதன்பின், மாதம், 28,000 ரூபாய் வீதம், 12 மாதங்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும்.இதற்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியே தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு, https://trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் வரும், 15ம் தேதிக்குள் விண்ணப்ப பதிவு மேற்கொள்ள வேண்டும் .


No comments:

Post a Comment

Popular Posts