News Update:தீபாவளிக்கு எத்தனை நாள் விடுமுறை? - KALVIITHAL

Search This Web

Join Our Group

Wednesday 1 November 2023

News Update:தீபாவளிக்கு எத்தனை நாள் விடுமுறை?

News Update:தீபாவளிக்கு எத்தனை நாள் விடுமுறை?.

STUDY MATERIALS CLICK BELOW LINK👇👇👇

தீபாவளி உள்ளிட்ட எந்த மதத்தின் பண்டிகை என்றாலும் உற்றார், உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வது தான் கொண்டாட்டத்தை உருவாக்குவதாக இருக்கும். தொடர் விடுமுறை இருந்தால் மட்டுமே நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினரை சென்று சந்திக்க முடியும்.


அப்படியிருக்க தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக் கிழமையில் வந்து ஒரு நாள் விடுமுறையுடன் முடிந்துவிடுமோ, சொந்த பந்தங்களை பார்க்க முடியாதோ என்ற கவலை பலதரப்பிலும் ஏற்பட்டுள்ளது.


நவம்பர் 12ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை தீபாவளி வரும் நிலையில் சனிக்கிழமை ஒரு நாளும் சேர்ந்து வழக்கமான வார இறுதி விடுமுறை போல் முடிந்துவிடுமோ என்ற கலக்கம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல் அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்களிடமும் உள்ளது.


சென்னை போன்ற பெருநகரங்களில் கல்வி, வேலைவாய்ப்புக்காக வந்து தங்கியிருப்பவர்கள் தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். வெள்ளிக் கிழமை பயணத்தை தொடங்கினாலும், தீபாவளி தினமான ஞாயிறுக் கிழமை இரவே மீண்டும் கிளம்பினால் மட்டுமே மறுநாள் திங்கள் கிழமை பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு வர முடியும்

 விருதுநகரில் உதயநிதி கலந்து கொள்ளும் கட்சி நிகழ்ச்சிக்காக மூடப்பட்ட பள்ளி கல்லூரிகள்


பண்டிகை முடியும் முன்பே கிளம்புவது ஒரு புறம் என்றால், ஒரே நாளில் லட்சக்கணக்கானோர் பயணம் மேற்கொள்வதால் பேருந்துகள், ரயில்களில் நெருக்கடி உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


எனவே தீபாவளிக்கு மறுநாள் திங்கள் கிழமை அன்று அரசு பொது விடுமுறையாக அறிவித்தால் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிவிட்டு சிரமமின்றி ஊர் திரும்ப முடியும் என்று பலதரப்பினரும் கூறுகின்றனர். அதற்கு பதிலாக வேறொரு சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கலாம் என்றும் கூறுகின்றனர்.


தமிழக அரசு இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

.

No comments:

Post a Comment

Popular Posts