புதிய நான்கு மாநகராட்சிகளுடன் இணையும் பகுதிகள் எவை எவை? அரசிதழில் வெளியீடு - KALVIITHAL

Search This Web

Join Our Group

Friday 22 March 2024

புதிய நான்கு மாநகராட்சிகளுடன் இணையும் பகுதிகள் எவை எவை? அரசிதழில் வெளியீடு

புதிய நான்கு மாநகராட்சிகளுடன் இணையும் பகுதிகள் எவை எவை? அரசிதழில் வெளியீடு.



STUDY MATERIALS CLICK BELOW LINK👇👇👇

புதிதாக உருவாக்கப்பட உள்ள காரைக்குடி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, நாமக்கல் மாநகராட்சிகளில் சேர்க்கப்பட உள்ள கிராம ஊராட்சிகளின் விபரம், தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விபரம்:


காரைக்குடி மாநகராட்சி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியுடன், கண்டனுார், கோட்டையூர் பேரூராட்சிகளும், சங்கராபுரம், கோவிலுார், இலுப்பக்குடி, அரியக்குடி, தளக்காவூர் ஆகிய கிராம ஊராட்சிகளையும் இணைத்து, மாநகராட்சி உருவாக்கப்பட உள்ளது.

திருவண்ணாமலை மாநகராட்சி:

திருவண்ணாமலை நகராட்சியுடன், வேங்கிக்கால், சின்னகாங்கேயனுார், கீழ்நாச்சிப்பட்டு, நொச்சிமலை, ஏந்தல், தென்மாத்துார், கீழ்கச்சராப்பட்டு, மேலதிக்கான், சாவல்பூண்டி, நல்லவன்பாளையம், கனந்தம்பூண்டி, ஆணாய்பிறந்தான், அத்தியந்தல், அடி அண்ணாமலை, தேவனந்தல், ஆடையூர், துர்க்கை நம்மியந்தல், மலப்பாம்பாடி ஆகிய ஊராட்சிகளும், அடி அண்ணாமலை பாதுகாக்கப்பட்ட காடுகள் பகுதிகளையும் இணைத்து, மாநகராட்சி ஏற்படுத்தப்பட உள்ளது.

புதுக்கோட்டை மாநகராட்சி:

புதுக்கோட்டை நகராட்சியுடன், திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம், கவிநாடு கிழக்கு, கவிநாடு மேற்கு, தேக்காட்டூர், 9ஏ நத்தம்பண்ணை, 9பி நத்தம்பண்ணை, வெள்ளனுார், திருவேங்கைவாசல், வாகவாசல், முள்ளூர் கிராம ஊராட்சிகள், கஸ்பா காடுகள் மேற்கு பகுதி ஆகியவற்றை இணைத்து, புதுக்கோட்டை மாநகராட்சி உருவாக்கப்பட உள்ளது.

நாமக்கல் மாநகராட்சி:

நாமக்கல் நகராட்சியுடன், வகுரம்பட்டி, வள்ளிப்புரம், ரெட்டிப்பட்டி, வீசாணம், மரூர்பட்டி, பாப்பிநாயக்கன்பட்டி, சிலுவம்பட்டி, தொட்டிப்பட்டி, வசந்தபுரம், வேட்டாம்பாடி, லத்துவாடி, காதப்பள்ளி ஆகிய கிராம ஊராட்சிகளை இணைத்து, நாமக்கல் மாநகராட்சி அமைக்கப்படும்.

இவ்விபரம், தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது .





No comments:

Post a Comment

Popular Posts