அடுத்த கல்வியாண்டு பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு - KALVIITHAL

Search This Web

Join Our Group

Sunday 17 March 2024

அடுத்த கல்வியாண்டு பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு

அடுத்த கல்வியாண்டு பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு.

STUDY MATERIALS CLICK BELOW LINK👇👇👇

எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேதி  அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, மொத்தம் உள்ள 543 தொகுதிகள் கொண்ட மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.  


முதற்கட்டமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, மார்ச் 20ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மனுக்களை தாக்கல் செய்ய மார்ச் 27ம் தேதி கடைசி நாளாகும். மனுக்கள் மார்ச் 28-ம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற மார்ச் 30-ம் தேதி கடைசி நாளாகும். ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டதையடுத்து நாடு முழுவதும்  தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன

ஜூன் 4ல் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடப்பதால் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.  ஜூன் 10ஆம் தேதி வரை பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .No comments:

Post a Comment

Popular Posts